10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம்கூட்டுத்தொகையிலும் மாற்றம்

விருதுநகர்: இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு
மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.