எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

வருங்காலத்தில் தொழில் துறைகளின் நிலை, எதிர்பார்ப்பு, வேலை பெற தேவைப்படும் திறன்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்றவை குறித்த ஆய்வின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
*நவீன இயந்திரங்களின் வருகையால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘கோர்’ பொறியியல் துறைகளில் 30 சதவீத வேலை வாய்ப்புகள் காணாமல் போகும். அதேசமயம், டிஜிட்டல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் உதயம், அதிக பணியாளர்களை நியமிக்கும் நிலையை உருவாக்கும்.
* பிக்-டேட்டா அனலிடிக்ஸ், மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட், பிளாட்பார்ம் இன்ஜினியரிங், கிராபிக் டிசைன் இன்ஜினியரிங், நியு யூசர் இன்டர்பேஸ் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் ஆகிய புதிய துறைகளில் தேவைப்படும் திறனாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் இருக்கும்.
* முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் முறையை அதிகளவில் கையாளும். அதன்படி, வரும் 2020ம் ஆண்டிற்குள் 22 சதவீத பணியாளர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும்.
* பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டத்தை தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத் தவறினால், வேலை வாய்ப்புக்கு தகுதியுடைய பட்டதாரிகளின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கும்.
* எந்த இன்ஜினியரிங் படிப்பை படித்திருந்தாலும், ‘கோடிங்’ திறன் உள்ளவர்களுக்கு சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
* ஈவன்ட் மேனேஜ்மென்ட், மீடியா, விஷûவல் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
* கிரியேட்டிவ் மற்றும் டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற புதிய துறைகளில் பணியாளர்களுக்கான தேவை எக்கச்சக்கமாக இருக்கும்.
* ஹெல்த் கேர் துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக உயரும்.
* சட்டத்துறையில், கார்ப்ரேட் சட்ட ஆலோசகளின் தேவையும் அதிகளவில் இருக்கும்.
* கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும்.
* வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பணியாளர்களின் தேவை அபரிமிதமாக இருக்கும்.
* மாற்றத்தக்க சக்தி துறையில் பணியாளர்களின் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில், 15 சதவீதத்தை தொடும்.
* அதிக தேவை மிகுந்த துறைகளாக பொறியியல், வங்கி, நிதி, கணிதம் மற்றும் சேவை ஆகியவை இருக்கும்.
* ஒருவரின் முன்னேற்றத்தில் ஆங்கில வழிதொடர்பு, பகுத்தாய்வு திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
-கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.