சித்த மருத்துவ கலந்தாய்வு முதல் நாளில் 308 பேருக்கு இடம்

சென்னை:சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில், 308 பேருக்கு இடம் கிடைத்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 21 சுயநிதி கல்லுாரிகளில் சித்தா,
ஆயுர்வேதம் உள்ளிட்ட, ஐந்து விதமான இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 1,109 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,000 பேர் வரை விண்ணப்பித்து, கலந்தாய்வுக்கு மூன்று மாதங்களாக காத்திருந்தனர். இதற்கான கலந்தாய்வு, நேற்று, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
நேற்று, 1,031 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 50 சதவீதம் பேர் வரவில்லை.
அரசு கல்லுாரிகளில்,356 இடங்களில், 247இடங்களும்; சுயநிதி கல்லுாரிகளில், 743 இடங்களில், 61 இடங்கள் என,மொத்தம் 308 பேருக்கு இடம் கிடைத்தது. இன்று, 1,500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.28ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.