பி.எஸ்.சி.நர்சிங், பி.பார்மஸி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கியது

பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்மஸி, பிஸியோ தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பல படிப்புகளில் மாணவ–மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்கியது.

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வந்திருந்தனர். கலந்தாய்வுக்கு முன்பு மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பி.எஸ்சி.நர்சிங் படிப்புக்கு 53 பேர்களும், பி.பார்மஸி படிப்புக்கு 44 பேர்களும், பிஸியோதெரபி படிப்புக்கு 15 பேர்களும் இடத்தை தேர்ந்து எடுத்தனர். ரேடியாலஜி படிப்பை 5 பேர்கள் தேர்ந்து எடுத்தனர். இந்த கலந்தாய்வு மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி கண்காணிப்பில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் நடத்தினார். கலந்தாய்வு 27–ந்தேதி வரை நடக்கிறது.