
கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள், நடமாடும் குழுக்கள், பறக்கும் படை என தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பதற்காக 72,551 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குரூப்–4 தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். இத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடை (கீ ஆன்சர்) ஒருவாரத்திற்குள் வெளியிடப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஆகையால் முறைகேடுகள் நடந்துவிடுமோ? என்று யாரும் அச்சப்படவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.