வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி; 1,155 மையங்களில் இன்று சிறப்பு முகாம்

கடலூர் : மாவட்டத்தில் இன்று 1,155 மையங்களில் வாக்காளர் பட்டியில் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில், வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த 15ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இப்பணி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர் சேர்ப்பதற்காக இன்று 26ம் தேதி மற்றும் வரும் 2ம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.அதன்படி மாவட்டத்தில் 2,234 ஓட்டுச் சாவடிகள் மொத்தம் 1,155 மையங்களில் இயங்கி வருகிறது. அதனையொட்டி 1,155 மையங்களில் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட உரிய படிவங்களை பூர்த்தி செய்து, வழங்கலாம்.இதுதொடர்பாக சந்தேகம் இருப்பின் கலெக்டர் அலுவலகம் 04142-230652, ஆர்.டி.ஓ.,க்கள் கடலூர் 04142 231284, விருத்தாசலம் 04143-260428, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் 04144-222256 ஆகிய தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.