தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இந்த ஆண்டே தொடங்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் செங்கல்பட்டு உள்பட 5 இடங்கள் தயாராக இருப்பதாக தகவல் - DINATHANTHI



தமிழகத்தில் இந்த ஆண்டே எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இதற்காக செங்கல்பட்டு உள்பட 5 இடங்களை அரசு அடையாளம் கண்டு இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்னை, ஜூலை.21-பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-எய்ம்ஸ்மருத்துவமனைதங்கள் தலைமையிலான மத்திய அரசு படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை தொடங்க இருப்பதாக அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழ்நாட்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க தகுதி உள்ள 3 அல்லது 4 இடங்களை தேர்வு செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன். அதற்காக முதலில் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முதல் கட்டத்தில், அதுவும் தற்போதைய நிதி ஆண்டிலேயே தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.5 இடங்கள் தேர்வு அதற்காக மத்திய அரசுக்கு தேவைப்படும் இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிபட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த இடங்களில் தேவையான சாலை வசதி உள்ளது. தமிழக அரசு மற்றும் அதன் நிறுவனங்களால் இந்த வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. அந்த 5 இடங்களிலும் தேவையான தண்ணீர் வசதி, மின்சார வசதி ஆகியவை உள்ளன. மேலும் ரெயில் மற்றும் விமான போக்குவரத்து இணைப்பு வசதியும் சிறப்பாக உள்ளன. இதற்காக மத்திய அரசுக்கு தேவையான அனைத்து விரிவான தகவல்களையும் வழங்கும்படி தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஏற்கனவே நான் அறிவுறுத்தி இருக்கிறேன்.இந்த ஆண்டிலேயே தொடங்க வேண்டும்தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தரமான மருத்துவ கல்வியுடன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சுகாதாரமும் மேம்படும்.இது போன்ற திட்டங் களை விரைவாக நிறைவேற்றி தமிழக அரசு பெருமையுடன் சாதனை படைத்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டிலேயே தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.