மே 15 வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம்-மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை

மே 15 வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம்-மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை


*📍பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.*



*📍21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 7 நாட்கள் எஞ்சியுள்ளன. மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா , கர்நாடகா,



ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.*

*📍இதில் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் ஊரடங்கை நீட்டிக்காமல் தளர்த்துமாறு கோரியுள்ளன.*

*📍இந்நிலையில், கொரோனாவிற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுக் கூட்டம் மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.*

*📍கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என சூசகமாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.*

*📍அதே நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட போக்குவரத்து தடை நீடிக்கும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இந்த தடையுத்தரவு நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*

*📍இதனிடையே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறையை மே 15ம் தேதி வரை நீட்டிக்கவும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.*

*♦Friends Social Media*