வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

சென்னை: அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. கடந்த வாரம் நடந்த முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 6.97 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், 2019 டிசம்பர், 23 அன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது; வரும், 22ம் தேதி வரை நடக்க உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, www.nvsp.in என்ற இணையதளத்திலும், 'VOTER HELPLINE' என்ற, 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்கடந்த, 4, 5ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில், பெயர் சேர்க்கக் கோரி, 6.97 லட்சம்; பெயர் நீக்கம் கோரி, 36 ஆயிரத்து, 704; திருத்தம் கோரி, 58 ஆயிரத்து, 828; முகவரி மாற்றம் கோரி, 45 ஆயிரத்து, 887 என, மொத்தம், 8.38 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இது தவிர, 'ஆன்லைன்' மற்றும் மொபைல் ஆப் வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. நேற்று, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமிலும், ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இன்று, கடைசி முகாம் நடக்க உள்ளது. பொது மக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்