அதிரடியாக ஏறிப்போச்சு கட்டணம்.. ஜியோ.. வோடஃபோன்.. ஏர்டெல்.. இதில் இப்ப இது பெஸ்ட் சாய்ஸ்?

இன்று முதல் ஜியோவின் விலையேற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதுஏற்கனவே ஏர்டெல்வோடபோன் நிறுவனங்கள் விலையை ஏற்றிவிட்டதால் தற்போது எந்த நெட்வொர்க்கின் திட்டங்கள் சிறந்ததாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
  
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடந்த டிசம்பர் 3ம் தேதி அதிரடியாக 42 சதவீதம் வரை விலையை உயர்த்தினஇதன்படி வோடஃபோன் - ஐடியா சேவைகளின் விலை பட்டியலை பார்த்தால் ஒரு மாதத்திற்கு அதாவது 28 நாட்களுக்கு விலை 249 ரூபாய்தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்குக்கு கிடைக்கும்அழைப்புகள் இலவசம் (வோடஃபோன் டு வோடஃபோன்).

ஏர்டெல் இதே பேக்கை 248 ரூபாய்க்கு வழங்குகிறதுஜியோ நிறுவனம் இதே பேக்கை 199 ரூபாய்க்கு வழங்குகிறதுஅதாவது தினமும் 1.5 டேட்டாவும் 100 SMS-களும் 28 நாள்களுக்கு கிடைக்கும். 149 ரூபாய் என்ற இருந்த பேக்கை 199 ஆக உயர்த்தி உள்ளது.

  
மூன்று மாத திட்டங்களையே (84 நாட்கள் தான்பலரும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால் அந்த திட்டத்தை பார்த்தால் ஜியோ நிறுவனம் 1.5 ஜிபி பிளானை 555 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளதுஏர்டெல் 598 ரூபாயாகவும்வோடபோன் 599 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளன.
  
84 நாட்களுக்கான 2 ஜிபி திட்டங்களை பார்த்தால்ஜியோ 599 ரூபாய்க்கும்ஏர்டெல் 698 ரூபாய்க்கும்வேடாபோன் 699 ரூபாய்க்கு வழங்குகிறதுஅதாவது ஜியோவில் மட்டும் 100 ரூபாய் குறைவாக இருக்கிறது.

எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஜியோ தான் சிறந்ததாக தெரிகிறது.