டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


 உதவி குற்றவியல் வழக்கறிஞர் பதவியில், 47 காலி பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 9, 10ல் நேர்காணல் நடத்தப்படும்

 தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு ஆராய்ச்சி உதவியாளர் பதவியில், 26 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, ஜூன், 30ல் தேர்வு நடந்தது. இதற்கான நேர்காணல், டிச., 11ல் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி துறையில், உதவி பயிற்சி அலுவலர் பணியில், 13 காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும், 18ம் தேதி முதல், 22ம் தேதி வரை, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்

 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியில், துறை தேர்வுகள், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும், 20ம் தேதி முதல், 29 வரை, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.