முதுநிலை ஆசிரியர் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

சென்னை:முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில், வினாத்தாளின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்ப, செப்., 27 முதல் மூன்று நாட்கள், கணினி வழியில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில், 1.47 லட்சம் பேர் பங்கேற்றனர்.இந்நிலையில், கணினி வழி தேர்வில் இடம் பெற்ற கேள்விகளும், அதற்கு பட்டதாரிகள் அளித்த பதில்களும், விடைத்தாள் நகலாக, செப்., 30ல் வெளியிடப்பட்டன. இதையடுத்து, வினாத்தாளின் உத்தேச விடைக்குறிப்பு விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி, விடை குறிப்பை தெரிந்து கொள்ளலாம். விடை குறிப்பில் தவறுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், நாளை முதல், 9ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், ஆன்லைன் வழியே தெரிவிக்க வேண்டும். சரியான ஆதாரங்களுடன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வழியே மட்டும், கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களை மட்டுமே, ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். கையேடுகள், தொலைநிலை கல்வி புத்தகங்கள் ஏற்று கொள்ளப்படாது. தபால் வழி கருத்துகள் பரிசீலனைக்கு எடுக்கப்படாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ள