'டான்செட்' நுழைவுத்தேர்வு அறிவிப்பு

சென்னை : முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வரும் மே 8 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், ''முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக்., உள்ளிட்டவற்றுக்கு மாணவர்கள் மே 8 முதல் விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கு ஏயுசிஇடி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களை
https://www.annauniv.edu

annauniv.edu.tancet 2019
என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் டான்செட் (TANCET - TamilNadu Common Entrance Test) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட கல்லூரிகளில் சேருவதற்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதனை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. ஆனால், இந்த வருடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளுக்கு மட்டும் AUCET தேர்வு நடைபெறும் என்று புதிய கொள்கை முறை கொண்டு வரப்பட்டது. இந்தமுறை அது ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.