பி.எட். தேர்வு தேதி மாற்றம்

சென்னை: ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, ஜூன், 8 மற்றும் 9 ம் தேதிகளில்
நடத்தப்படும்' எனவும், அதேநாளில் பி.எட்., இறுதியாண்டு தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வும், பி.எட். தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.இதனை ஏற்று பி.எட்.. தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.அதன்படி ஜூன் 8-ம் தேதி நடக்கவிருந்த பி.எட். இறுதியாண்டு தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகலில் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.