படித்த பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய தி.மலை கலெக்டர்

திருச்சி:திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், சிறு வயதில், திருச்சியில் படித்த அரசு பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி
மகிழ்ந்தார்.திருவண்ணாமலை கலெக்டராக பணிபுரிந்து வரும், கந்தசாமி.

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையில் உள்ள, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது, மாவட்ட கலெக்டராக உள்ள அவர், நேற்று முன்தினம், அந்த பள்ளிக்கு சென்றார்.

பள்ளிப்பருவத்தில் தன்னோடு படித்த, சவுந்தர ராஜன் என்பவரையும், உடன் அழைத்துச் சென்ற கலெக்டர், அங்கிருந்த மாணவர்களுடன் அமர்ந்து, படிப்பு பற்றியும், பொது அறிவு பற்றியும், மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் உரையாடினார்.அரசு பள்ளியில் படித்தாலும், கலெக்டராக முடியும் என்பதற்கு தன்னையும், தொழில் அதிபராக உயர முடியும் என்பதற்கு, நண்பர், சவுந்திரமாஜனையும் உதாரணமாக்கி, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

பள்ளியில், மூன்று மணி நேரம், மாணவ - மாணவியருடன் செலவிட்ட அவர், ஆசிரியர்களிடமும் உரையாடினார்.மிக எளிமையாக சென்று, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய கலெக்டருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தன