நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் தாய்மொழி தினம் கொண்டாட வேண்டும்: மத்திய மனிதவள துறை அமைச்சகம் உத்தரவு

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாடமத்திய மனிதவளத்துறை அமைச் சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்நாட்டில் பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் தேசிய ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறனர். இதற்கிடையே மாநில மொழிகள் மற்றும் அவரவர் தாய்மொழியை கவுரவிக்கும் பொருட்டுதாய்மொழி தினம்கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
 
இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) முன்மொழிந்த பிப்ரவரி 21-ம் தேதி ஆண்டு தோறும் தாய்மொழி தினமாக கடந்த 3 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாட மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தால் உத்தர விடப்பட் டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தாய்மொழியை கவுரவிக்கும் வகையில் யுனெஸ்கோ அறிவித்தபடி பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் எல்லா கல்வி நிறுவனங்களிலும் அந்தந்தமாநில மொழிகளில் பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம், இசை உட்பட போட்டிகளை நடத்த வேண்டும். மாநில மற்றும் உள்ளூர் மொழி பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது