வெளிநாட்டு மாணவர்கள் தயாரித்த பாரம்பரிய உணவு

மேலுார்: மேலுார் அரிட்டாபட்டி பாரம்பரிய உணவு திருவிழாவில் அமெரிக்கா லைப் அமைப்பின் மாணவர்கள் பாரம்பரிய உணவுகளான கேப்பை ரொட்டி, மீன்குழம்பு,
புளியோதரை, முருங்கைகீரை, தினை பாயாசம், மொச்சை பயறு வருவல், எள்ளு துவையல், பானகம் தயாரித்தனர்.மாணவர்கள் நான்டோலே, அனீஷ்குப்தா தலைமையில் 10 பேர்பங்கேற்றனர். ஏழு மலை பாதுகாப்பு செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராமத்தினர் வரவேற்று உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பிறகு களிஞ்சமலை கோயிலில் தியானம் செய்தவர்கள் தாங்கள் தயாரித்த பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டனர். தானம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பாரதி ஒருங்கிணைத்தார்.