போராட்டத்தின்போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த ஜனவரி 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, பள்ளிக்கு வராமல் இருந்த ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டு என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேலைநிறுத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்கள், எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டுமென பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்