சென்னை பல்கலை தேர்வு முடிவுகள், இன்று வெளியீ்டு

சென்னை: சென்னை பல்கலையின், நவம்பர் தேர்வு முடிவுகள், இன்று
வெளியாகின்றன.சென்னை பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், பட்டம் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, நவம்பரில் நடந்த தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. முதுநிலை படிப்பில் மறுமதிப்பீடு தேவைப்படுவோர், தங்களின் கல்லுாரிகள் வழியே, வரும், 6 முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இளநிலை பட்டம் படிப்போர், மறுகூட்டலுக்கு, வரும், 6 முதல், 12 வரை, கல்லுாரிகள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை படிப்பை, 2015 - 16 கல்வியாண்டு மற்றும் அதற்கு முன் முடித்தவர்கள், சென்னை பல்கலையின் இணைய தளத்தில் மட்டுமே, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்து உள்ளது.