அங்கீகார அரசு ஊழியர்கள் சங்கங்கள் நாளை அடையாள வேலை நிறுத்தம்

சென்னை: போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்த, தலைமை செயலக சங்கம் உள்ளிட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற, ஆறு அரசு ஊழியர் சங்கங்கள், நாளை, அடையாள வேலை
நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.ஏற்க முடியாதுபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் நடத்தி வருகிறது.'ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்க முடியாதது' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்த, தலைமை செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற, ஆறு அரசு ஊழியர்கள் சங்கங்களும், போராட்ட நிலைக்கு சென்றுள்ளன.நேற்று மாலை நடந்த, இந்த சங்கங்களின் செயற்குழு கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:விடுதலை'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும், எவ்வித நிபந்தனையுமின்றி, விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ரத்து செய்ய வேண்டும்.கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' எனக் கோரி, நாளை ஒரு நாள், அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், அரசுக்கு எப்போதும் பாலமாக இருந்துள்ளோம்; எங்களையும் போராட்ட களத்திற்கு தள்ளி விடாமல், முதல்வர், அனைவரையும் அழைத்து பேச வேண்டும்.அரசு நல்ல முடிவு எடுக்காவிட்டால், வரும், 31ல் மீண்டும் கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.'தேர்தல் பிரசாரத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்; நிலுவை ஊதியத்தை வழங்குவோம்' என, ஜெ., அறிவித்திருந்தார். அவரது கோரிக்கையை, முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.