'ஆதார்' மூலம் ரேஷன் வாங்கலாம்

சென்னை, ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், மாற்று கார்டு கிடைக்கும் வரை, 'ஆதார்'
அட்டையை காட்டி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டு தொலைத்தவர்களுக்கு, மாற்று கார்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. அதுவரை, அவர்கள், ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வாயிலாகவும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம், என்றார்.