அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து 
பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற 
மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. கஜா
 புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, 
நடந்த நிவாரண பணிகள் பாராட்டும்படி இருந்தன.

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு 11 லட்சத்து
 17 ஆயிரம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் 
நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான
 விலையில்லா திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. 
வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி 
ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை 
கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.