அரசு வாகனங்களில் அவசர கால பட்டன் ஜனவரி முதல் கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களிலும், 2019 ஜன., முதல் பதிவாகும் பொதுத்துறை

வாகனங்களில், அவசர கால பட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவதுகட்டாயம் ஆகிறது.
டில்லியில், 2012ல், ஓடும் பஸ்சில், கல்லுாரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். பாதுகாப்புஇது தொடர்பான வழக்கில், பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்களில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு பஸ்களில், கண்காணிப்பு கேமரா; பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி; அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.இதன்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அக்., 31ல், இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுஉள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களில்,2019 ஜன., முதல் பதிவாகும் பொதுத்துறை வாகனங்களில், அவசர காலபட்டன்கள் மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகளை, கட்டாயம் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் இந்த உத்தரவு, பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். அச்சுறுத்தல் ஏற்படும் போது, பஸ்களில் பொருத்தப்படும் அவசர கால பட்டன்களை அவர்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். பஸ்சில் உள்ள, ஜி.பி.எஸ்., கருவிஉதவியால், பஸ் செல்லும் இடத்தை, போலீசார் கண்டறிவர்.கண்காணிப்புபஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியே, அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில், நேரடி காட்சிகளாக பார்க்க முடியும். மேலும், பஸ், வேறு பாதையில் கடத்தப்பட்டாலும், கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.