பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது? உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏன்
ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு அடுத்தபடியாக, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்குமாறும், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து மேல் படிப்புக்கு கல்லூரிக்கோ அல்லது பணிக்கோச் செல்லும் போது, அவர்களுக்கு ஆங்கில பேச்சு அறிவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்தால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அப்பாவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.