Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 11, 2018

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது.
1,199 காலியிடங்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவுள்ளனர்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள முக்கியமான பதவியிடங்கள் குரூப் 2-வில்தான் வருகின்றன. 1,199 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 10-இல் வெளியிடப்பட்டது. வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் எனப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,199 பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
எத்தனை பேர்? குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வினை எழுத மாநிலம் முழுவதும் விண்ணப்பித்தோரில், 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேர் பெண்கள். 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேர் ஆண்கள். 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
இந்தத் தேர்வினை தமிழ் வழியே 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேரும், ஆங்கில வழியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் எழுதவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
400 மையங்களில்... 400 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலைத் தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது. பொது அறிவு மற்றும் அறிவுத்திறன் சார்ந்த கேள்விகள் 150 மதிப்பெண்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 150 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 90. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் பிரதான தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வானது, பட்டப்படிப்பு அடிப்படையில் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 102 ஆகும். முதல் நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும் தேர்வு நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment