தீவிர புயலாக அதிகாலை கரையை கடக்கும் கஜா.. 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இரவு 10.30 மணி நிலவரப்படி, நாகைக்கு கிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் வெளிப்பகுதி கரையைத் தொட்டு கடந்து வருகிறது. கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாகை அருகே இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறிய நிலையில், அந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா நடுவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட கஜா புயல் திசை மாறி, கடலூர் மற்றும் பாம்பன் நடுவே வியாழக்கிழமையான இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. காலை நிலவரம் காலை நிலவரம் இன்று மாலை 7 மணி நிலவரப்படி புயலானது நாகைக்குக் கிழக்கே 138 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. அது மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தீவிர புயல் தீவிர புயல் இன்று இரவு 8 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். நாகை அருகே அது கரையைக் கடக்கும். இந்த நேரம் என்பது 1 அல்லது ஒன்றரை மணி நேரம் முன்-பின் இருக்கலாம். இப்போது புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது. சென்னை நிலை சென்னை நிலை புயலால் சென்னைக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. மிதமான மழை மட்டுமே பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தஞ்சை, நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிப் பகுதி கரையைத் தொட்டது வெளிப் பகுதி கரையைத் தொட்டது வெளிப் பகுதி கரையைத் தொட்டது பாலச்சந்திரன் இரவு 10.30 மணிக்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் கிழக்கு, தென்கிழக்கே 95 கி.மீ தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாகைக்கு தெற்கே கரையை கடக்க கூடும். புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் சில நேரங்களில் 120 கி.மீ வேகத்திலும் கரையை கடக்க கூடும். 80-90 கி.மீ வேகத்தில் புயலால் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் வேகம் 110 கி.மீ வரை இருக்கும் என்றும், தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் 3 மணிவரை புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இப்போது, 15 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.