School Morning Prayer Activities - 08.10.2018


Related image


 
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
பழமொழி :
Call a spade a spade
உள்ளதை உள்ளவாறு சொல்
 
பொன்மொழி:
நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.
- ஷேக்ஸ்பியர்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
2.ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ
நீதிக்கதை
பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்
ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றிஅவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.
ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டுஅந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும்நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.
கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லைஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமேகொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்ததுஅவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.
நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது
நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால்என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.
நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
இன்றைய செய்தி துளிகள்:
1.தேசிய திறனாய்வுத் தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்!
2.சுனாமி தாக்கியதில் 5000 பேர் மாயம்...... காணாமல் போனவர்களை தேடும் பணியை நிறுத்த இந்தோனேசிய அரசு முடிவு
3.தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
4.பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது: அதிகாரிகள் தகவல்
5.வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி