அரசு பள்ளிக்கு உதவிய ஓய்வுபெற்ற நீதியரசர் குடும்பம்

05.10.2018 அன்று மதுரை கிழக்கு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வலையர்சக்குடி பள்ளியில் சுமார் 121 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.கடந்த 4 ஆண்டுகளில் இந்த அரசு பள்ளி தனியார்பள்ளிக்கு நிகரான வளர்ச்சி பெற்றுவருகிறது. அதில் மற்றொரு மணி மகுடமாக அங்கு பணியாற்றும்  திரு.சரவணக்குமார் உதவி ஆசிரியர் அவர்களின் நெருங்கிய உறவினர் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.மாயாண்டி அவர்கள் வழிகாட்டலில் சரவணக்குமார் மைத்துனர் திரு.அரவிந்த் மற்றும் அவர்களின் நண்பர்கள் உதவியோடு*
 
தன்னை உருக்கி பிறரை சமூகம் காக்கும் தன்னலமற்று பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்காகவும்_
 பல இலட்சங்களை செலவு செய்தால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலையை மாற்றிடவும்,ஏழை மாணவ செல்வங்களின் கல்வி புரட்சிக்கு உதவிடவும் LAP TOP & PROJECTOR போன்றவற்றை பொருட்களை பள்ளிக்கு பரிசாக அளித்தனர்"*.
 
*அரசு பள்ளிகளை காக்க கண்ணுக்கு தெரியாத வேர்களாய் இதுபோன்ற பல நல் உள்ளங்கள் உதவுவது ஆசிரியர்களை இன்னும் இன்னும் அதிக உத்வேகத்துடன் உழைத்திட  ஆவலை தூண்டுகிறது.*
 
*அரசுபள்ளிகளை காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டென்று உதவும் நல் உள்ளங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசுபள்ளிகளில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி ஏழைகள் ஏற்றத்தின் நுழைவாயிலான அரசுப்பள்ளிகளை  காக்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.*
 
*இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற யாதவா மகளிர்கல்லூரி  வரலாறு பிரிவின் தலைவர் திருமதி.ஹேமா சரவணக்குமார் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, தழிழாசிரியர் பசுமை நேசர் திரு.மகேந்திர பாபு ,ஆர்.சி மேலவடக்கூர் தலைமையாசிரியர் திரு.அருளப்பன் மற்றும் திரு.பாஸ்கரன்,தேத்தாங்குளம்  . மற்றும் நண்பர்கள் திரு.கண்ணன்,திரு.ராஜ்குமார் ஊர் தலைவர் நாச்சான் , மாலை நேரப்பள்ளி ஆசிரியர்களான திரு. ரமேஷ் திருமதி.ரேணுகா,திருமதி.பஞ்சு ஆகியோர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி.சுந்தரவல்லி அவர்களுக்கு பொன்னாடைகளை அணிவித்து அரசுபள்ளிகளை காக்கும் விழாவினை மேலும்  சிறப்பித்தனர்.*