1.2 லட்சம் வேலைக்கு 2.3 கோடி பேர் போட்டி

புதுடில்லி: இந்திய ரயில்வே துறை, உலகின் மிக பெரிய ஆட்சேர்ப்பு திட்டத்திற்கான தேர்வை ஆன் லைனில் நடத்தி வருகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: இந்திய
ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவற்காக டில்லி அருகே உள்ள நொய்டாவில் தேர்வை நடத்துகிறது. மொத்தம் உள்ள 1.2 லட்சம் காலி பணியிடங்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து 2 கோடியே 30 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். குறைந்தபட்ச கல்வி தகுதிய 10-ம் வகுப்பு.வரும் டிசம்பர் வரையில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நாள் தோறும் காலை 9-:00-10:30, 12:30--2:00, மாலை 4:00--5:30 ஆகிய நேரங்களில் நடத்தப்படுகிறது. கேள்விகள் கணிதம், பொதுஅறிவு, அறிவியல் மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் குறித்து கேட்கப்படுகின்றன. தேர்வு எழுதுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாளர்கள் நொய்டா தேர்வு மையத்திற்கு முன்னர் குவிந்து வருகின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவும் தேர்வு மையத்திற்கு முன்னர் ஒன்றிணைந்தது போல் காணப்படுகிறது. ஒன்றரை மணி நேரம் நடைபெறும் தேர்வில் 3,450 பேர் கலந்து கொள்கின்றனர்.