பிளஸ் 1 துணை தேர்வு : 9ம் தேதி மறுமதிப்பீடு முடிவு

பிளஸ் 1 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வை, ஜூனில் எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது. 


மதிப்பெண் மாறியவர்களின் பதிவு எண் பட்டியல்,scan.tndge.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.பதிவு எண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் இல்லை என, கருத வேண்டும். திருத்தப்பட்ட மதிப்பெண்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதியம் 2:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.