யுகேஜி முதல் டிகிரி வரை இலவச கல்வி : உ.பி., அரசு முடிவு

அரசு கல்வி நிறுவனங்களில் யுகேஜி எனப்படும் ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தர பிரதேச அரசு
திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்*

*மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர், முதல்கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல் முக்கிய நகரங்களில் ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு இலவசமாக கல்வி வழங்க திட்டமிட்டுள்ளோம். .பி.,யில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்வுகளை குறைக்க முடிவு செய்துள்ளோம்*
*மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை இந்த மாதம் வெளியிடப்படும். திட்டமிட்ட நாட்களுக்குள் சில பாடங்களை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்*
 *ஜிஎஸ்டி தொடர்பான படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் கொண்டு வர உள்ளோம். ஜிஎஸ்டி படிப்பு முறையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார்*