டிப்ளமா நர்சிங் படிப்பு தர வரிசை வெளியீடு

சென்னை: தமிழகத்தில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 23 அரசு டிப்ளமா நர்சிங் கல்லுாரிகளில், 2,000
இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 23ல் துவங்கியது. இதில், 10 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கான தரவரிசை பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், அறிவியல் பிரிவில் படித்த, 9,060 பேர்; செவிலியர் தொழிற்கல்வி பிரிவில் படித்த, 451 பேர்; பிற பாடத்திட்டத்தில் படித்த, 692 பேர் என, 10 ஆயிரத்து, 203 பேர் இடம் பெற்றுள்னர்.இதுகுறித்து, மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:தரவரிசை பட்டியல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். கவுன்சிலிங் தேதி, அட்டவணை குறித்த தகவல்கள், விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.