சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை : முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.முன்னதாக  நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள்
உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை அடுத்து கவுன்சிலிங்கில் ஏற்பட்டு உள்ள குழப்பம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் அடுத்த ஆண்டு முதல் சித்தா மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கும்  நீட் தேர்வை கொண்டு வருவது பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பி உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், துறை சார்ந்த அமைச்சர்கள் , தலைமை செயலாளர், சுகாதாரத்துறை முதன்மை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ படிப்பில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேரலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு அறிமுகப்படுத்த முடியாது என்றும் முதல்வர் கூறினார்