ஆசிரியர்கள் ஏன் தப்பிக்க முயல வேண்டும்?, அல்லது பயப்பட வேண்டும்?

ஆசிரியர் சொந்தங்களுக்கு வணக்கம். ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி, கொடுக்குபிடி, முறுக்குபிடி இனிமேல் தப்பிக்க முடியாது என்று பதிவிட்டும், பகிர்ந்து கொண்டும் வரும் கிறுக்கர்களுக்கு


ஆசிரியர்கள் ஏன் தப்பிக்க முயல வேண்டும்?, அல்லது பயப்பட வேண்டும்?. அவர்கள்மீது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் அல்லது லஞ்ச ஊழல்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி வைத்தல், அல்லது வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகள் உள்ளதா? ஏன் அவர்கள் தப்பிக்க நினைக்க வேண்டும்? அல்லது பயப்பட வேண்டும்?   
 
ஆசிரியர்கள் அன்றும் இன்றும் என்றும் ஆசிரியர்களாகதான் பணியாறற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் ஒன்றும் அரசியல் வாதிகள் அல்ல. இவ்வுலகத்தை இரட்சித்து காத்து வருபவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் தன்னம்பிக்கையுடன்  தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற பகுத்தறிவையும் பண்பையும் மாணவர்களுக்கு உருவாக்குவதுடன், நாளுக்கு நாள் தங்களை Update செய்து கொண்டு, தன் தரத்தையும் உயர்த்தி கொண்டு, நெஞ்சம் நிமிர்த்தி உரத்த குரலில் அறத்தை விதைத்து, மாற்றத்திற்கு மாற்றம் கொடுத்து, இவ்வையத்தை வாழ்விப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே, என்பதை நினைவில் கொண்டு, கோமாளி தனமான பதிவுகளை நிறுத்தி கொள்ளுங்கள்