கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்

கால்நடை மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., என்ற, கால்நடை மருத்துவம்; ஏ.ஹெச்., என்ற, கால்நடை பராமரிப்பு படிப்புக்கு, 820 இடங்கள் உள்ளன. 


இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், மே, 21 முதல் பதிவிறக்கம் செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 11க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 


தற்போது, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 11ம் தேதி வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும், 18ம் தேதி வரையும், அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.அதே போல, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் வெளி நாட்டினர், ஜூலை, 6 முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.ஜூலை, 20க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, கால்நடை மருத்துவ பல்கலை அறிவித்துள்ளது.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks