அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை: தமிழக அரசு முடிவு!

சென்னை:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர முன்னுரிமை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியான நிலையில், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதியவர்களில் 12 பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்திருந்த மாணவர்களுக்கு எம்.பி.பி.பிஎஸ் படிப்பில் முன்னுரிமை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.