மதுரையில் தமிழுக்கு பதில் ஹிந்தி நீட் வினாத்தாள்

மதுரை நாய்ஸ் பள்ளியில் நடந்த, நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கு பதில், ஹிந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால், காலையில் தேர்வு நிறுத்தப்பட்டு, மதியம் நடந்தது.மதுரையில், 20 மையங்களில் தேர்வு நடந்தது. 11 ஆயிரத்து, 800 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 11 ஆயிரத்து, 341 மாணவர்கள் தேர்வு எழுதினர். 


நரிமேடு நாய்ஸ் பள்ளியில், 720 மாணவர்கள் எழுதினர். இதில், 120 பேருக்கு தமிழ் வழி வினாத்தாள் வழங்கப்படவேண்டும். ஆனால், அவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் வினாத்தாள் வழங்கப்பட்டது.மாணவர்கள் குழப்பம் அடைந்து, வினாத்தாள்களை திரும்ப ஒப்படைத்தனர். இதனால், தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிற மையங்களில் இருந்து தமிழ் வினாத்தாள் நகல் எடுத்து, மதியம், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை தேர்வு நடத்தினர். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.தேர்வு ஒருங்கிணைப்பாளரான நரிமேடு, கே.வி., பள்ளி முதல்வர், செல்வராஜ் கூறுகையில், ''வினாத்தாள் பற்றாக்குறையால், சிறப்பு அனுமதி பெற்று மதியத்திற்கு மேல் தேர்வு நடத்தினோம்,'' என்றார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks