CBSE வினாத்தாள், 'லீக்' : 'மாபியா' வேலை

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு, கணக்குப் பாடத்திற்கான வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ., அதிகாரியும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து, மத்திய கல்வித்துறை செயலர், அணில் ஸ்வரூப், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வினாத்தாள் வெளியானதில் இருந்து, சி.பி.எஸ்.இ.,யின் தலைவர், அனிதா கார்வால் மீது, பலரும் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த முறைகேட்டில், சி.பி.எஸ்.இ., அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை. கல்வித்துறையில், 'மாபியா' கும்பல்கள் ஊடுருவி உள்ளன. யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.