தமிழக அரசில் 896 ஊராட்சி செயலர் வேலைக்கு அழைப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 896 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 896
பணி: ஊராட்சி செயலர்
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. காஞ்சிபும் - 44 (www.kanchi.tn.nic.in)
2. கடலூர் - 56 (www.caddalore.tn.nic.in)
3. தேனி - 10 (www.theni.tn.nic.in)
4. ஈரோடு - 27 (www.erode.tn.nic.in)
5. திருவாரூர் - 27 (www.thiruvarur.tn.nic.in)
6. திண்டுக்கல் - 33 (www.dindigal.tn.nic.in)
7. பெரம்பலூர் - 12 (www.perambaloor.tn.nic.in)
8. கோவை - 27 (www.coimbatore.tn.nic.in)
9. திருவள்ளூர் - 39 (www.krishnagri.tn.nic.in)
10. கிருஷ்ணகிரி - 25 (www.karur.tn.nic.in)
11. நீலகிரி -12 (www.nilgris.tn.nic.in)
12. அரியலூர் - 25 (www.ariyalur.tn.nic.in)
13. திருவண்ணாமலை - 69 (www.tiruvannamalai.tn.nic.in)
14. தூத்துக்குடி - 28 (www.thoothukudi.tn.nic.in)
15. விருதுநகர் - 12 (www.virudhunagar.tn.nic.in)
16. வேலூர் (www.vellore.tn.nic.in)
17. திருநெல்வேலி - 34 (www.tirunelveli.tn.nic.in)
18. கரூர் - 14 (www.karur.tn.nic.in)

மேற்கண்ட பணியிடங்கள் இனசுழற்சி அடிப்டையில் நிரப்பப்படவுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் - முன்னுரிமையற்றவர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் - முன்னுரிமைப் பெற்றவர் பிரிவு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - முன்னுரிமையற்றவர் ஆகிய இனசுழற்சி அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.7,700 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 முதல் 35 வரை. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு 21 முதல் 30 வரை.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். காலியிடம் ஏற்பட்டுள்ள வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: காலியாக உள்ள ஊராட்சி அலுவலகங்களில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். மாவட்ட அரசு இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியானோர், குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்று நகல், சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஏப். 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்குக் கிடைக்குமாறு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரங்கள் அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்ட இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம். What,s New- பகுதியை கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.