மதுரையில் ஏப்.,7 -9 ல் உயர்கல்விக்கான ஆலோசனையை அள்ளித்தரும் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியை தேர்வு செய்ய பயனுள்ள ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ஏப்.,7 முதல் 9 வரை நடக்கிறது.
தினமலர் நாளிதழுடன் சென்னை எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி இணைந்து நடந்தும் இந்நிகழ்ச்சியில் தமிழக கல்லுாரிகளில் உள்ள வசதிகள், மாணவர் சேர்க்கை விபரங்கள், எந்த படிப்பை, எந்த கல்லுாரியில் தேர்வு செய்தால் எதிர்காலம் வளமானதாக அமையும் உட்பட 100 சதவீதம் கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான பல்வேறு அம்சங்களும் இங்கு கிடைக்கும்.




தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை பயனுள்ள கருத்தரங்குகள் நடக்கிறது. பாடங்கள் குறித்து பல்வேறு தலைப்புகளில் 30 கல்வி வல்லுனர்கள், நிபுணர்கள் அரிய ஆலோசனை வழங்குகின்றனர். படிப்புகள் குறித்த சந்தேகங்களுக்கு வல்லுனர்கள் பதில் அளிக்கின்றனர்.கண்காட்சியில் தமிழகத்தில் முன்னணியில் உள்ள 93 கல்வி நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைக்கின்றன.கருத்தரங்கில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு 'டேப்லெட்கள்' மற்றும் வாட்சுகள் பரிசாக வழங்கப்படும். 

'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை' பல்வேறு ஆலோசனை கிடைக்கும். பங்கேற்கும் மாணவர்களுக்கு 'எந்த கல்லுாரி யில் என்ன படிப்பு உள்ளது' என்ற வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.நிகழ்ச்சியை கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டிடியூஷன், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், ஸ்ரீசக்தி இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, சிக்ஷா இணைந்து வழங்குகின்றன. பவர்டு பை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கலச லிங்கம் நிகர்நிலை பல்கலை. அனுமதி இலவசம்.