ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்பு

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதற்கான எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணம், பயணிகளிடம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். எம்டிஆர் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என வங்கிகளுக்கும் மத்திய அரசின் நிதி சேவைகள் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் டிக்கெட் கட்டணம் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.