Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 8, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.


கடந்த ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் நாடு முழுவதும் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பங்களைச் செலுத்துவதற்கு மார்ச் 9-ஆம் தேதி (இரவு 11.50 மணிக்குள்) கடைசியாகும். தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைனில் மார்ச் 10-ஆம் தேதி (இரவு 11.50 மணிக்குள்) செலுத்த வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,400 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.750 ஆகும். விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மார்ச் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இணையதளத்திலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மே மாதம் 6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூன் 5-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment