தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 2–ம் கட்டமாக 11–ந் தேதி நடக்கிறது

தமிழகத்தில் ஜனவரி 28–ந் தேதி முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிலையில் 2–ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் 11–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் என தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம். 11–ந் தேதி தனியார் டாக்டர்களும் சொட்டு மருந்து வழங்கவேண்டும்.

முக்கிய பஸ்–ரெயில் நிலையங்கள், சோதனை–சுங்க சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன. 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.