தமிழக பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: 2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். வரும் 2018-2019-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து ஏற்கெனவே, அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது.
இதன் பிறகு, 2018-2019-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பேரவையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்று மாலையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், நிதிநிலை அறக்கை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்றும், துறைவாரிய மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.