அரசுப்பள்ளியில் மாணவர்கள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து கேட்ட COLLECTOR , CEO

திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு இணையாக 9-ம் வகுப்பு மாணவிகள் நடத்திய பாடத்தை தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்வத்துடன் கவனித்தார்.


திருவண்ணாமலை பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வைஷ்ணவி, பூஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுச்சூழல் குறித்த கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், தங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 
இந்த கடிதத்தினை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவிகளை சந்திக்க நேரம் ஒதுக்கினார். 
இதையடுத்து, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வைஷ்ணவி, பூஜா ஆகிய இருவரும் மற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தும், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்தும், வகுப்பறையில் பாடம் நடத்தினார். 
அப்போது ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மாணவிகள் பாடம் நடத்துவதை உன்னிப்பாக கவனித்தனர். 
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 9-ம் மாணவிகள் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது, கல்லூரி மாணவர்களும் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளுக்கு சமுதாய பணியாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.