312 மையங்களில் இன்று 'நீட்' பயிற்சி துவக்கம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு, சிறப்பு பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில், நீட் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 'தமிழகம் முழுவதும், 412 மையங்களில் நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதில், 100 மையங்கள் மட்டும், முதற்கட்டமாக, ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டன. இந்நிலையில், மீதமுள்ள, 312 மையங்களிலும், இன்று முதல் பயிற்சி துவங்குகிறது.