'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை

கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர், கோபால் பிறப்பித்துள்ள உத்தரவு:



அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.


தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.