மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்! அமைச்சர் செங்கோட்டையன்

மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள் தலா 5 மரம் வீதம் வளர்க்க வேண்டும். 5 மரங்கள் வளர்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை.
ஆளுநர் உரையில் கல்வித்துறையில் புரட்சிகர திட்டங்கள் இடம்பெறும். புதிதாக 512 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 25 கிலோ மீட்டருக்கு ஒன்றாக தேர்வு மையம் 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.