'ஏ','பி'கிரேடுகளுக்கு போனஸ் இல்லை

திண்டுக்கல்: ஏ மற்றும் பி கிரேடு கலெக்டர், தாசில்தார், டி.ஆர்.ஒ., முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர், உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் என உயர்நிலையில் இருக்கும் அலுவலர்களுக்கு ரூ.1000, சி மற்றும் டி கிரேடு உதவியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், டெக்னீசியன்கள் போன்ற கீழ்நிலை ஊழியர்களுக்கு ரூ.3
ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பை நேற்று அரசு அறிவித்தது. அதில், ஏ மற்றும் பி கிரேடில் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் இல்லை எனவும், பி மற்றும் டி கிரேடில் இருப்பவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
ஏற்கனவே பொங்கல் போனஸ் அறிவிப்பு தாமதான நிலையில், ஏ, பி கிரேடில் இருப்பவர்களுக்கு போனஸ் இல்லை என்பது மேல்நிலை அலுவலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.