தமிழக அரசு விருதுகள் முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூவர் தின விழாவில், தமிழக அரசின் விருது பெற, தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரத்தை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும்
தொண்டாற்றி, பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2018ம் ஆண்டிற்கான, திருவள்ளூவர் விருதுக்கு, முனைவர் கோ.பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2017ம் ஆண்டுக்கான பெரியார் விருது, முன்னாள் அமைச்சர், வளர்மதி; அம்பேத்கர் விருது, டாக்டர் ஜார்ஜ்.
அண்ணா விருது, சுப்ரமணியன்; காமராஜர் விருது, தினகரன்; பாரதியார் விருது, முனைவர் பாலசுப்ரமணியன்; பாரதிதாசன் விருது, ஜீவபாரதி; திரு.வி.க., விருது, எழுத்தாளர் பாலகுமாரன்; கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
வரும் 16 அன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும், திருவள்ளுவர் தின விழாவில், முதல்வர் பழனிசாமி, விருதுகளை வழங்க உள்ளார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.